6-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள்
செங்கல்பட்டை அடுத்த திருநிலை கிராமத்தில் உள்ள ஸ்ரீபெரியாண்டவர் ஆலய கும்பாபிஷேக 6-ம் ஆண்டு நிறைவையொட்டி சர்வ சிவசக்தி மகா வேள்வி, பெரியாண்டவர் புராண வரலாற்று நூல் மற்றும் பெரியாண்டவர் புகழ் பாடும் குறுந்தகடு வெளியீட்டு விழா சனிக்கிழமை 12-9-2009 நடைபெற்றது.
மாலை தேவார இசைப்பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. சிவ.அருள்மணி தலைமையில் மகாவேள்வி தொடங்கி நடத்தப்பட்டது. திருப்போரூர் எம்எல்ஏ திரு மூர்த்தி, பெரியாண்டவர் புராண வரலாற்று நூலை வெளியிட்டார். திரு இரா. நாகராஜன் வழங்கும் திரு செங்கை பி. ராஜநாராயணன் உள்ளிட்டோர் பாடியுள்ள சிவ அருள்மணியின் 'ஆண்டவா பெரியாண்டவா' குறுந்தகடு வெளியீட்டு விழா திருக்கழுக்குன்றம் வேதமலை இருமுடிக்குழு தலைவர் திரு தி.க.துரை சுவாமிகள், திரு இரா.துரைராசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. முதல் பிரதியை திரு ஜி.முத்துசாமி, திரு த.தாமோதரன், திரு பி.சாரங்கன், திரு எம்.வி. நாகராஜ் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
இரவு பெரியாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதனையடுத்து அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெரியாண்டவர் ஆலய நிர்வாகி திரு ஜி.ஏகசீலன் மற்றும் திருநிலை கிராம மக்கள் செய்தனர்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |















